ஆப்நகரம்

‘கள்ளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோர் இணைந்து ‘கள்ளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

TOI Contributor 6 Sep 2016, 4:14 pm
இயக்குனர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோர் இணைந்து ‘கள்ளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil kallan first look released
‘கள்ளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


இயக்குனர் சந்திரா இயக்கி வரும் படம் ‘கள்ளன்’. இவர் இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் ஹீரோவாக கரு.பழனியப்பன் நடித்துள்ளார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் மக்கள் வேட்டையாடிகளாக வாழ்ந்த சம்பவத்தை கதை களமாக வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் சந்திரா. இந்தப் படம் முழுக்க தேனி மாவட்டத்தின் மலை மற்றும் கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் முதல் போஸ்டரை அமீர் மற்றும் ராமின் கைகளால் வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் இயக்குனர் சந்திரா. அதன்படி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்தப் போஸ்டரை இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்