ஆப்நகரம்

பவர் ஸ்டாருடன் நடிக்கும் கல்யாணி நாயர்!

மலையாள நடிகை கல்யாணி நாயர், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

TOI Contributor 14 Nov 2016, 2:26 pm
மலையாள நடிகை கல்யாணி நாயர், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Samayam Tamil kalyani nair acts with power star
பவர் ஸ்டாருடன் நடிக்கும் கல்யாணி நாயர்!


நடிகை கல்யாணி நாயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மலையாள நடிகை. தற்போது இவர் ‘புதுசா நான் பொறந்தேன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘மோகனா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் ஒரு நாடக நடிகையின் கதை. படத்தை மோரா பிக்சர்ஸ் சார்பில் ஆனந்த் சஜீத், ஜெயகுமார், ஆனந்த், பிரபாவதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ‘மோகனா’ என்ற நாடக நடிகையாக கல்யாணி நாயர் நடிக்கிறார். படத்திற்கு எல்.ஜி.பாலா இசையமைக்கிறார். ஆர்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த் கூறுகையில், ”நாடக நடிகை மோகனா மீது அதே குரூப்பில் உள்ள பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு காதல் ஏற்படுகிறது. மோகனா மீது ஊர் பண்ணையார் ராஜேந்திரனுக்கும் காதல் கொள்கிறார். யாருக்கு மோகனா கிடைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரே இரவில் நடக்கும் கதை. கிராமத்தில் ஒரு நாடகம் நடக்கிறது. நாடகம் முடிந்து நாடக குழு ஊரைவிட்டு கிளம்பும்போது படம் முடிந்து விடும். இதனால் முழு படமும் இரவு நேரத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்