ஆப்நகரம்

‘வான்’ படத்தில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்!

அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கவுள்ள ‘வான்’ படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நாயகியாக அறிமுகமாகிறார்.

Samayam Tamil 5 Dec 2018, 4:31 pm
அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கவுள்ள ‘வான்’ படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிககிறார். இந்தப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். ‘புரூஸ்லீ’ படத்தில் நடித்த க்ரீத்தி கர்பந்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள்.
Samayam Tamil vaan


கல்யாணி தெலுங்கு சினிமாவில் ஏறகெனவே அறிமுகமாகியுள்ளார். தற்போது தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹலோ’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் இருவர் தவிர இன்னொரு கதாநாயகிக்கான தேடுதலும் நடைபெற்று வருகிறது. துல்கருடன் சேர்த்து இந்த நான்கு பேருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்