ஆப்நகரம்

இரு துருவங்கள் சந்திக்கும் "தலைவன் இருக்கிறான்"!

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லால் நடிக்கவுள்ளார்.

TNN 7 Aug 2017, 4:20 pm
‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லால் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil kamal and mohanlal will join together
இரு துருவங்கள் சந்திக்கும் "தலைவன் இருக்கிறான்"!


நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம்’ மற்றும் ’சபாஷ் நாயுடு’ ஆகிய படங்கள் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுக்குள் வெளியாகிவிடும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2012ம் இந்தியில் வெளியான படம். இந்தப் படத்தில் அக்ஷய குமார் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘ஓ மை காட்’. தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது. அந்தப் படத்தில்தான் நடிகர் கமல் நடிக்கவுள்ளார்.

படத்தின் பெயர் ‘தலைவன் இருக்கின்றான்’. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் வேடத்தில் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது..இவர்கள் இருவரும் 2009ம் ஆண்டு வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளனர். தற்போது இரண்டாவதாக இணையவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்