ஆப்நகரம்

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு

நடிகா்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆந்திர மாநில அரசு என்.டி.ஆா். தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 14 Nov 2017, 7:31 pm
நடிகா்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆந்திர மாநில அரசு என்.டி.ஆா். தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kamal haasan and rajinikanth selected for ntr national award
ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு


ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு வருடமும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தோ்ந்தெடுத்து நந்தி விருதை வழங்கி வருகிறது. மேலும் அத்துடன் என்.டி.ஆா். தேசிய விருது, பின்.என்.ரெட்டி மாநில விருது, நாகிரெட்டி & சப்ரணி மாநில விருது, ரகுபதி வெங்கையா மாநில விருது மற்றும் நடுவா் சிறப்பு விருது ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்.டி.ஆா். தேசிய விருது 2014ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டு ரஜினிகாந்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பி.என்.ரெட்டி மாநில விருது, பாகுபலி இயக்குநா் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்