ஆப்நகரம்

ஆரவ் சீக்கிரம் வா! உனக்காக காத்துக்கொண்டிருப்பேன்! கமலிடம் தெரிவித்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா கமலிடம் மீண்டும் ஆரவ்வை காதலிப்பதாக தெரிவித்தார்.

TNN 5 Aug 2017, 10:57 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா கமலிடம் மீண்டும் ஆரவ்வை காதலிப்பதாக தெரிவித்தார்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 41 updates
ஆரவ் சீக்கிரம் வா! உனக்காக காத்துக்கொண்டிருப்பேன்! கமலிடம் தெரிவித்த ஓவியா!


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா, கமலை சந்தித்து பேசினார். அப்போது ஓவியாவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் ஓவியா. இன்றைய தலைமுறையில், காதலும், அன்பும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இரண்டு வேறு என்று புரிந்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அப்போது ஓவியாவைப் பார்த்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லுங்கள், உள்ளே போ! உள்ளே போ! என்றெல்லாம் கோஷம் எழுப்பப்பட்டது.



ஆனால், ஓவியாவோ மீண்டும் ஆரவ்வைத் தான் காதலிப்பதாகவும், அவருக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிக்பாஸ் குடும்பத்தினர் யார் பற்றியும் எதையும் தெரிவிக்காமல், ஒட்டுமொத்தமாக ஐ லவ் யூ என்றார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வது பற்றி எதுவும் தெரிவிக்காத ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.



ஓவியாவை வழியனுப்பி வைத்த கமல், பிந்து, ரைசா, கணேஷ் ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேசினார். அப்போது அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஓவியா இருந்திருந்தால் அவர் தான் ஜெயிச்சிருப்பா என்று பிந்து தெரிவிக்க, ரைசாவோ ஓவியாவிடம் சண்டை போட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால், கணேஷ் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கக்கூடாது. அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இனிமேல் இது போன்ற தவறு நடக்கக்கூடாது என்றார். இறுதியில், பரணியின் நம்பிக்கை மீண்டும் காட்டப்பட்டது.

அப்போது, நான் வெளியேறும் போது Bye Bharani என்று யார் சொன்னார்களோ, அவர்கள் ஜெயிப்பார்கள் என்றார். ஆனால், உண்மையில், ஓவியா தான் ஜெயித்திருக்கிறார். நாளைய எபிசோடிலும், ஓவியாவை பற்றி தான் பேசப்படுவது போன்று புரோமோ காட்டப்பட்டுள்ளது. இந்த புரோமோவில், சினேகன் எப்போதும் உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருப்பார் என்று அழுதுகொண்டே தெரிவிக்க, அதனைக் கேட்ட கமலும் கண்கலங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்