ஆப்நகரம்

பிக் பாஸிடம் வில்லங்கமான கேள்விகளை கேட்ட நடிகை ஸ்ரீபிரியா, சதீஷ்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் புதுவிதமாக நடிகை ஸ்ரீபிரியா,நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

TOI Contributor 12 Aug 2017, 11:15 pm
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் புதுவிதமாக நடிகை ஸ்ரீபிரியா,நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 49 updates
பிக் பாஸிடம் வில்லங்கமான கேள்விகளை கேட்ட நடிகை ஸ்ரீபிரியா, சதீஷ்


வில்லங்கமான கேள்விகள்:
எப்போதும் போல வார இறுதியில் கமல் மட்டும் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பேசி வந்தார். ஆனால் இந்த வாரம் புதுவிதமாக நடிகை ஸ்ரீபிரியா,நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகிய இரண்டு விருந்தினர்களை அழைத்து நிகழ்ச்சி குறித்து பேசினர்.

இதில் ஸ்ரீபிரியா மருத்துவ முத்தத்தை ஏன் மக்களுக்கு காட்டவில்லை என பிக் பாஸிடம் கேட்டார். அதற்கு உள்ளே உள்ள போட்டியாளர்களின் கண்ணியம் கருதியும், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இப்படி செய்ததாகவும், அதை பார்த்து மக்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது என்பதற்காகவும் இப்படி சரியானவற்றை மட்டும் ஒளிபரப்புவதாக கூறினார்.

அதே போல முத்தம் இருவர் மட்டும் கொடுப்பது ஆனால் அந்த மருத்துவமுத்தம் என்றால் எப்படி இருக்கும் என தெரியவில்லை என தெரிவித்தார்.

சதீஷ்:
கவிஞர் சினேகன் பெண்களுக்கு ஒரு வகையாகவும், ஆண்களுக்கு ஒரு வகையாகவும் அவர்களின் சோகத்தை போக்கும் வித்தையை கையாள்வதாக அதை கமலை வைத்து செய்துகாட்டினார்.

நமிதாவுக்கு எப்படி கோபத்தையோ அல்லது சோகத்தை போக்க கட்டிப்பிடிப்பார் என கமலை வைத்து செய்துகாட்டினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்