ஆப்நகரம்

திடீரென கைது செய்யப்பட்ட ஆரவ் - மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சக்தி!

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சக்தி பங்கேற்க நுழைந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஆரவ் திடீரென வீட்டில் நுழைந்த சிலர் கைது செய்து அழைத்து சென்றனர்.

TNN 4 Sep 2017, 12:20 am
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சக்தி பங்கேற்க நுழைந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஆரவ் திடீரென வீட்டில் நுழைந்த சிலர் கைது செய்து அழைத்து சென்றனர்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 70 updates
திடீரென கைது செய்யப்பட்ட ஆரவ் - மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சக்தி!


நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள இன்று அனைத்து போட்டியாளர்களிடமும் கமல் பேசினார். அப்போது யார் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த சினேகன், ஆரவ், காஜல் ஆகியோரில் யார் வெளியேற வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அப்போது ஜூலி எனக்கு அந்த மூன்று நபர்களும் இங்கே இருக்க வேண்டும் என தான் நினைக்கின்றேன் என கூறியதும், போதும் நாரதர் வேலை பார்த்தது போதும் என கமல் கூறினார். உடனே ஜூலி முகம் மாறியது. என்னை சொன்னேன் என கமல் சமாளித்தார்.

காஜல் வெளியேற்றம் :
இந்த வாரத்தில் காஜல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மீண்டும் சக்தி:
பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்க முன்னாள் போட்டியாளர் சக்தியை கமல் அனுப்பி வைத்தார்.

ஆரவ் கைது:
சக்தி வீட்டில் நுழைந்த நிலையில், அங்கு வந்த சில முகமுடி அணிந்த பயில்வான்கள், ஆரவை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரவை அனுப்பிவைத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்