ஆப்நகரம்

2.0 Movie: ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்! - ஏன் தெரியுமா?

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் வாய்ப்பை கமல் ஹாசன் மறுத்ததாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 2:25 pm
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமாருக்கு பதிலாக கமல் நடிக்க கேட்டதாகவும், ஆனால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஷங்கர் கூறியுள்ளார்.
Samayam Tamil kamal


ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிஸ் ஆன அர்னால்ட்:
2.0 படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் அக்‌ஷய் குமார் வேடத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க அனுகியதாக ஷங்கர் பகிர்ந்துள்ளார்.
ஆனால் ஹாலிவுட் நடிகரை நடிக்க வைப்பதில் ஒப்பந்தகளில் சில சிக்கல் ஏற்பட்டதால் நிறைவேறவில்லை.


நோ சொன்ன கமல்:
அர்னால்டை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கமலை அனுகியதாகவும், ஆனால் தனக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்கத் தான் விருப்பம் என கூறி மறுத்துவிட்டதாக ஷங்கர் பகிர்ந்துள்ளார்.


இந்த படத்தில் அக்‌ஷய் குமார் ஒரு வில்லன் என்ற போதிலும், அவரது மோதலில் கூட ஒரு நியாயம் இருக்கும் என ஷங்கர் குறிப்பிட்டதோடு, இந்த படத்தில் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்