ஆப்நகரம்

முரசொலி பவளவிழா வாழ்த்தரங்க நிகழ்ச்சிக்கு கமல் அழைப்பு : கொக்கி போடும் திமுக

முரசொலி பவள விழா நிகழ்ச்சி அழைப்பிதழில் நடிகர் கமல் ஹாசனின் பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் சலசலக்க வைத்துள்ளது.

TNN 31 Jul 2017, 3:36 pm
சென்னை : முரசொலி பவள விழா நிகழ்ச்சி அழைப்பிதழில் நடிகர் கமல் ஹாசனின் பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் சலசலக்க வைத்துள்ளது.
Samayam Tamil kamal haasan name in murasolis 75th year jubilee
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்க நிகழ்ச்சிக்கு கமல் அழைப்பு : கொக்கி போடும் திமுக


முரசொலி பத்திரிக்கையின் பவளவிழாவுக்கான வாழ்த்தரங்கம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நடைப்பெற உள்ளது.

இந்த விழாவில் வரவேற்புரை முரசொலி செல்வம் தர உள்ளார். இந்த இதழின் பவளவிழாவுக்கு தமிழகத்தின் முக்கிய பத்த்ரிக்கைகளின் மூத்த ஆசிரியர்களையும், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.



இதனிடையே, தற்போது தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகர் கமலின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே இந்த விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ரஜினியின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு பார்வையாளராகவும் அவர் இடம்பெற மாட்டார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்