ஆப்நகரம்

Indian 2: 'மகத்தான மனிதர்கள்'.. 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் கலைஞர், நேதாஜி.!

'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 15 Dec 2022, 7:32 pm
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் உருவானது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Samayam Tamil இந்தியன் 2
இந்தியன் 2


நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஷங்கர். ராம்சரண் நடிப்பில் 'ஆர்சி 15' படத்தை இயக்க துவங்கினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சுமூக தீர்வு ஏற்பட்டு 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. மேலும், அண்மையில் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கவனம் ஈர்த்தது.

Dhanush: போடு வெடிய.. உறுதியான தனுஷ் - எச். வினோத் கூட்டணி: வேறலெவல் சம்பவம்.!

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" என பதிவிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் கமல்.

Thunivu: அந்த மனசு தான் கடவுள்: 'துணிவு' பட நடிகருக்காக அஜித் செய்த காரியம்.!

'இந்தியன் 2' படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி உள்ளிட்ட நட்சத்த்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்