ஆப்நகரம்

ஊரடங்கிற்கு கமல் ஆதரவு: அஜித், விஜய், ரஜினிக்கு அவர் வைத்த கோரிக்கை

வரும் ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டும் என மோடி கூறியுள்ளதற்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2020, 6:04 pm
கொரோனா தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தற்போது அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil Kamal Haasan


நேற்று இரவு நாடு மக்களுக்கு உரை ஆற்றிய மோடி அத்யாவசிய சேவை பணிகளில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரையும் வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக்கொண்டார். மேலும் வரும் ஞாயிற்றுகிழமை மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் எனவும் ஊரடங்கில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Janta Curfew என பெயரிடப்பட்டுள்ள இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுப்பற்றி ட்விட் செய்துள்ள அவர் "நான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு என் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது இருக்கும் அசாதாரண சூழ்நிலையில் நாம் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.நமக்கு வந்திருக்கும் இந்த பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ள நாம் ஒற்றுமையுடன் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்."

"என் ரசிகர்கள், நண்பர்கள் இதற்கு ஆதரவு தர வேண்டுகிறேன்" என கூறியுள்ள கமல், தன் ட்விட்டில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, தனுஷ்,விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களை டேக் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்