ஆப்நகரம்

Vishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.

Samayam Tamil 9 Aug 2018, 3:50 pm
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.
Samayam Tamil pooja-kumar-825


2013ம் ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தையும் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.


குறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.

இந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் இன்று வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்தை பற்றிய தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் 5 / 3.5 என விஸ்வரூபம்- 2 படத்திற்கான தனது ரேட்டிங்கை அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபம்- 2 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்