ஆப்நகரம்

Kamal Haasan: விக்ரம்-கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் தொடங்கின!!

நடிகர் விக்ரம் அடுத்ததாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தின் பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.

Samayam Tamil 31 Aug 2018, 11:56 am
நடிகர் விக்ரம் அடுத்ததாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தின் பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.
Samayam Tamil விக்ரம்-கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் தொடங்கின!!
விக்ரம்-கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் தொடங்கின!!


நடிகர் விக்ரம் தற்போது சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து விக்ரம், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்பு, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ பணிகள் நேற்றுத் தொடங்கியுள்ளன. இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடக்க நிகழ்ச்சியில், கமல்ஹாசன், விக்ரம், அக்ஷரா ஹாசன், ஜிப்ரான், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா மற்றும் விஸ்வரூபம் பட நாயகி பூஜா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்