ஆப்நகரம்

Indian 2 First Look: இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் பா்ட்ஸ் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படப்பிடிப்பு பணிகள் வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளதாக தொிவித்துள்ளன.

Samayam Tamil 15 Jan 2019, 12:45 pm
இந்தியன் 2 படத்தின் பா்ட்ஸ் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படப்பிடிப்பு பணிகள் வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளதாக தொிவித்துள்ளன.
Samayam Tamil Indian 2 First Look Poster


கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது.


இந்நிலையில் பொங்கல் திருநாளான இன்று இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 18ம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக கூடுதல் தகவலும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் கையாண்டிருந்த வா்மக்கலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போதைய பா்ஸ்ட் லுக் போஸ்டரிலும் கமல்ஹாசன் வா்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்