ஆப்நகரம்

ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்: வைரலாகும் கமலின் கெத்து போட்டோ

கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 12:16 pm
உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். லாக்டவுனுக்கு முன்பு அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடியவில்லை.
Samayam Tamil kamal haasan


பிற படங்களின் ஷூட்டிங் தற்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று தெரியவில்லை. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான போட்டோஷூட்டில் கமல் கடந்த வாரம் கலந்து கொண்டார். இந்நிலையில் கமல் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்தாலும் இந்த அளவுக்கு கெத்தா, மாஸா இருக்க முடிகிறதே. புகைப்படமே செமயாக இருக்கிறது என்றால் லோகேஷின் படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சும்மாவே வித்தியாசமான படங்களை எதிர்த்து ரசிகர்களை இம்பிரஸ் செய்வார் லோகேஷ். இதில் வித்தியாசத்திற்கு பெயர் போன கமலுக்காக நிச்சயம் ஏதாவது புதுமையான கதையை ரெடி செய்து வைத்திருப்பார். நீங்க நடத்துங்க ஆண்டவரே என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் முடித்து படத்தை தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் கமல். ஆனால் பட்ஜெட் தொடர்பாக லைகா நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் தான் படப்பிடிப்பை துவங்காமல் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

ஓ, இதனால் தான் இந்தியன் 2 ஷூட்டிங் இன்னும் துவங்கலையா

பட்ஜெட் விவகாரம் தொடர்பாக ஷங்கர் லைகாவுக்கு கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை லைகா மறுத்துள்ளது. இந்தியன் 2 செட்டில் 300 முதல் 600 பேர் வரை இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசோ, படப்பிடிப்பு தளத்தில் 100 பேருக்கு மட்டுமே இருக்க அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாகத் தான் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்று லைகா விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்