ஆப்நகரம்

ரம்ஜானுக்கு வெளியாகும் 'விஸ்வரூபம் 2' டீசர்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டீசர் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNN 13 Jun 2017, 4:11 pm
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டீசர் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil kamal haasans vishwaroopam 2 teaser likely to come out for ramzan
ரம்ஜானுக்கு வெளியாகும் 'விஸ்வரூபம் 2' டீசர்


கடந்த 2013ஆம் ஆண்டு 'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. ஆனால், இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் முடங்கியது. அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்', 'தூங்காவன்','பாபநாசம்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் உரிமத்தை தற்போது கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருப்பதால், திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற ஜூன் 23ஆம் தேதி 'விஸ்வரூபம் 2' டீசரை வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan's Vishwaroopam 2 teaser likely to come out for Ramzan.The spy thriller, which is written, directed and co-produced by Kamal Haasan, is a sequel to the blockbuster film Vishwaroopam.

அடுத்த செய்தி

டிரெண்டிங்