ஆப்நகரம்

பொன்னியின் செல்வனில் கமல் உண்டாம்; அஜித் இல்லையாம்!!

நடிகர் கமல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாடகத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

TOI Contributor 22 Aug 2016, 4:41 pm
நடிகர் கமல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாடகத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil kamal hasan will be acting in ponniyin selvan
பொன்னியின் செல்வனில் கமல் உண்டாம்; அஜித் இல்லையாம்!!


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும பொருட்டு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதையடுத்து, ஒரு மல்டி ஹீரோ கதையை தேர்ந்தெடுத்து அந்த படம் மூலம் கிடைக்கும் வசூலையும் கட்டிடம் கட்ட நிதியாக எடுத்துக்கொள் ளப்போவதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறி வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை நடத்தி அதன்மூலமும் நிதி திரட்டப்போவதாக அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆனால், பொன்னியின் செல்வன் அனைவரையுமே கவர்ந்த நாடகம். இதில் தற்போதைய திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு நடிப்பார்களா என்ற கேள்வியை விஷால் முன் வைத்தனர்.

அந்த கேள்விக்கு விஷால் சொன்ன பதில், ‘‘பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. மற்றபடி, ரஜினி சார் நடிப்பது பற்றி தெரியவில்லை. அதோடு, நட்சத் திர கிரிக்கெட் போட்டியின்போது விஜய், அஜீத் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆர்வத்துடன் கலந்து யார் யார் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்