ஆப்நகரம்

அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட நடிகர் கமல்!

நடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று நடிகர் கமல் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 2 Nov 2018, 3:16 pm
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை மூடர் கூடம்‘ படத்தை இயக்கிய நவீன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பை இன்று நடிகர் கமல் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘அக்னி சிறகுகள்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kamal


இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இதே தலைப்பில்தான் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்