ஆப்நகரம்

மலையாள ரீமேக்கில் நடிக்கும் கமல்!?

மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் கமல் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

TOI Contributor 14 Sep 2016, 4:18 pm
மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் கமல் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil kamal will be acting in malayalam remake
மலையாள ரீமேக்கில் நடிக்கும் கமல்!?


ஓணம் பண்டிகையை முன்னிட்டு தற்போது கேரளாவில் வெளியாகியிருக்கும் படம் ‘ஒப்பம்’. இந்தப் படத்தின் ஹீரோவாக மோகன்லால் நடித்துள்ளார். படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்தப் படம் மலையாளத்தில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் மோகன்லால் பார்வையற்றவராக நடித்துள்ளார். அவரது அற்புதமான நடிப்பு எல்லோரையும் பாராட்ட வைத்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தை வெளியாவதற்கு முன்னரே ரஜினியும், வெளியான மறுநாள் அஜீத்தும் சிறப்பு காட்சிகளாக பார்த்துள்ளனர். தற்போது நடிகர் கமலும் படத்தைப் பார்த்து இயக்குனர் பிரியதர்ஷனை அழைத்து பாராட்டி உள்ளார். படத்தில் மோகன்லால் பார்வையற்றவராக நடித்த கேரக்டர் கமலை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

இதுபோல் ‘ராஜபார்வை’ படத்தில் கமல் பார்வையற்றவராக நடித்துள்ளார். இப்போது இந்தப்படத்தை பார்த்ததும் இதன் தமிழில் ரீமேக்கில் தான் நடிக்க விரும்புவதாக பிரியதர்ஷனிடம் கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ பட ரீமேக்கில் நடித்து, படத்தை வெற்றிப்படமாக்கியவர் கமல். ஆகையால் அவர் இந்தப் படத்தில் நடித்தாலும் நடிக்கலாம் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்