ஆப்நகரம்

கே.பாலச்சந்தரின் சிலையை திறக்கும் கமல், வைரமுத்து!

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை கமல்ஹாசனும், வைரமுத்துவும் இணைந்து அவரது சொந்த ஊரில் திறந்து வைக்கிறார்கள்.

TNN 14 Jun 2017, 12:55 am
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை கமல்ஹாசனும், வைரமுத்துவும் இணைந்து அவரது சொந்த ஊரில் திறந்து வைக்கிறார்கள்.
Samayam Tamil kamalhaasan and vairamuthu set bronze statue for director k balachander in his native
கே.பாலச்சந்தரின் சிலையை திறக்கும் கமல், வைரமுத்து!


பாடலாசிரியர் வைரமுத்து, இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுத வாய்ப்பில்லாமல் தவித்த போது, கே.பாலச்சந்தர் தன்னுடைய படங்களில்பாடல்கள் எழுதவாய்ப்பளித்தார். பிறகு, தங்களுடைய தயாரிப்பில் உருவான ‘ரோஜா’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்லி எல்லாப் பாடல்களையும் வைரமுத்துவையே எழுத வைத்தார் பாலச்சந்தர்.

அதற்கு நன்றிக்கடனாக, கே.பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பாலச்சந்தரின் வெண்கலச் சிலையை வைரமுத்து திறந்து வைக்கிறார். ஜூலை 9ம் தேதி நடைபெறும் இந்த விழாவில், கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்