ஆப்நகரம்

’பத்மாவதி’ பிரச்சனையில் களத்தில் குதித்த கமல்; தீபிகாவை பாதுகாக்கக் கோரி முக்கிய கருத்து!

பத்மாவதி படப்பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

TNN 20 Nov 2017, 11:38 pm
சென்னை: பத்மாவதி படப்பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil kamalhaasan supports deepikas padmavati movie
’பத்மாவதி’ பிரச்சனையில் களத்தில் குதித்த கமல்; தீபிகாவை பாதுகாக்கக் கோரி முக்கிய கருத்து!


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர், ரன்வீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்மாவதி’. இப்படம் ராணி பத்மாவதி, ரத்தன் சிங், சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ராஜ்புட் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, ‘பத்மாவதி’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ’பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும்.

இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும்.

I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat— Kamal Haasan (@ikamalhaasan) November 20, 2017 இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

KamalHaasan supports Deepika's Padmavati movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்