ஆப்நகரம்

என் வீட்டை கொரோனா மருத்துவமனையாக்க தயார்: கமல்

எளிய மக்களுக்கு உதவுவதற்காக தன் வீட்டையே மருத்துவ மையமாக மாற்ற உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 4:54 pm
தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சற்றுமுன் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களது டூர் கைடு என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Kamal Haasan wants to convert his house into hospital


இவர்களோடு சேர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனது வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்கி அதில் மக்கள் நீதி மையத்தின் மருத்துவர்களை கொண்டு எளிய மக்களுக்கு உதவ முடிவு செய்த்திருப்பதாக கூறியுள்ளார்.

"இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்" என கமல் ட்விட் செய்துள்ளார்.


கமலின் இந்த முயற்சிக்கு அரசு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் இன்று காலை பதிவிட்ட மற்றொரு ட்விட்டில் கமல் சிறுதொழில் செய்பவர்கள் பற்றி வருத்தத்துடன் பேசியிருந்தார்.

"உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்" என அவர் ட்விட்டரில் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்