ஆப்நகரம்

Vikram Review: 'விக்ரம்' படத்தின் முதல் விமர்சனம்.. தீயா இருக்க போகுது.!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் முதல் திரை விமர்சனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 31 May 2022, 7:22 pm
கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அண்மையில் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Samayam Tamil Vikram
Vikram


மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது 'விக்ரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரைவிமர்சனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓவர்சீஸ் சென்சார் விமர்சனம் எனும் பெயரில் நபர் ஒருவர் இதனை வெளியிட்டுள்ளார்

அதில் விக்ரம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த ஆக்சன் த்ரில்லர் படங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷன் காட்சிகள் கலக்கலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் சிறப்பாக நடித்துள்ளனராம்.

பொது இடத்தில் நிர்வாண போட்டோஷூட்: பிரபல நடிகைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை.!
குறிப்பாக, க்ளைமேக்ஸ் தான் படத்தின் USP எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்