ஆப்நகரம்

ஆண்டவர் இறங்கி அடிச்சுருக்காரு: மிரட்டலாக வெளியான 'விக்ரம்' பர்ஸ்ட் சிங்கிள்.!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Samayam Tamil 11 May 2022, 8:26 pm
கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் அதிரடியான பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil Vikram
Vikram


'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். விஜய்யின் 'பிகில்' படத்துடன் நேரடியாக மோதிய இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தால் மெஹா ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் தற்போது 'விக்ரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு அரசியல் பிரவேசத்தால் கமலின் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமலின் படம் என்பதால் 'விக்ரம்' படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் கமல் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. 'ஆழ்வார் பேட்டை ஆண்டவா' பாடலை போல சென்னை ஸ்லாங்கில் கமல் பாடி அசத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். விண்டேஜ் கமலாக இறங்கி அடித்துள்ளதாக பாடலை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

லாக்டவுன் சமயத்தில் பணக்கஷ்டம்: கமல் முன்னாள் மனைவியின் பரிதாப நிலை.!
கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். ஜுன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்