ஆப்நகரம்

ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் கமலின் 'விக்ரம்': வெறித்தனமான காத்திருப்பில் ரசிகர்கள்.!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 30 Apr 2022, 6:30 am
'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ஜுன் மாதம் வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Vikram
Vikram


'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற லோகேஷ், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப்படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை. லோகேஷின் தனித்துவமான இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மெஹா ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் தற்போது 'விக்ரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் படங்களை பார்த்தே நான் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய தீவிர ரசிகரான லோகேஷின் இயக்கத்தில் கமல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையில் தவித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.!
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விக்ரம் படத்தின் கேரள உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளார். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். 'விக்ரம்' படத்தின் டிரைலரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப்படம் ஜுன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்