ஆப்நகரம்

விஷால் - நாசர் இடையே பிரச்சனையா? விஷாலை தாக்கி பேசிய கமீலா நாசர்

விஷால்-நாசர் இருவரும் நடிகர் சங்க பாண்டவர் அணியில் ஒன்றாக இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் நடுவில் பிளவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கமீலா நாசர் பதிவிட்ட ட்விட் தான் இந்த பேச்சு எழுவதற்கு காரணம்.

Samayam Tamil 3 Mar 2020, 5:56 pm
முன்னணி குணச்சித்திர நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர். அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவர் சினிமா தயாரிப்பாளரும் கூட என்பதால் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்.
Samayam Tamil Kameela Nassar and Vishal


விரைவில் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அவர் விஷால் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டி போடவுள்ளார் என செய்திகள் பரவி வந்தது.

இதற்கு முந்தைய தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவிக்கு வந்த விஷால் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதனால் தான் அவருக்கு பதிலாக நாசர் மனைவி கமீலாவை தேர்தலில் போட்டியிடவைக்கவுள்ளார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என கமீலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தற்போது தயாரிப்பாளர் சங்கம் இருக்கும் மோசமான நிலைக்கு விஷால் தான் காரணம் என மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் அவர்.

"இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன்.அதற்காக கவலையும் அக்கறையும் கொள்கிறேன்.. இந்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை.எந்த அணியோடும் இப்போதுவரை இல்லை. சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடுமட்டுமே என் கை இணையும்" என ட்விட்டரில் கூறியுள்ளார் அவர்.

மேலும் நடிகர் விஷால்-நாசர் ஒரே அணியில் இருக்கும் நடிகர் சங்கத்திலும் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்