ஆப்நகரம்

2 திருமணங்களிலும் கொடுமை என்ற பிக் பாஸ் பிரபலம்: உண்மையை சொல்லட்டானு எச்சரித்த நடிகை

இரண்டு திருமணங்களிலும் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக பிக் பாஸ் மராத்தி போட்டியாளரான நடிகை சினேகா வாக் தெரிவித்தார். அதை பார்த்த நடிகை காம்யா பஞ்சாபியோ, உண்மையை சொல்லிவிடுவேன் என எச்சரித்திருக்கிறார்.

Samayam Tamil 23 Sep 2021, 4:24 pm
தன் திருமணங்கள் பற்றி பிக் பாஸ் மராத்தி நிகழ்ச்சியில் பேசிய நடிகை சினேகா வாகை நடிகை காம்யா பஞ்சாபி எச்சரித்துள்ளார்.
Samayam Tamil kamya panjabi warns bigg boss marathi 3 contestant sneha wagh
2 திருமணங்களிலும் கொடுமை என்ற பிக் பாஸ் பிரபலம்: உண்மையை சொல்லட்டானு எச்சரித்த நடிகை


சினேகா வாக்

பிக் பாஸ் மராத்தி நிகழ்ச்சியின் 3வது சீசன் ஞாயிற்றுக்கிழமை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் டிவி நடிகையான சிகேனா வாக் கலந்து கொண்டுள்ளார். அவரின் முன்னாள் கணவரான அவிஷ்கர் தர்வேகரும் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சினேகா, இரண்டு திருமணங்களிலும் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

காம்யா பஞ்சாபி

சினேகா பேசியதை பார்த்த நடிகை காம்யா பஞ்சாபி கோபம் அடைந்துவிட்டார். காம்யா சமூக வலைதளத்தில் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்டீர்கள், வாய்ப்பு கிடைத்துவிட்டது. நல்லது. ஆனால் ஏன் இந்த நாடகம்?. உங்களின் முதல் திருமணம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இரண்டாவது திருமணம் பற்றி கதை சொல்ல வேண்டாம். ஒரு விளையாட்டிற்காக இப்படி பேசுவதா?. நான் உண்மையை வெளியிடுவேன். உங்களுக்கே அது நன்றாக தெரியும். குட்லக் என்றார்.

நன்றி

சினேகா கூறியதை பார்த்த இரண்டாவது கணவரான அனுராக் சொலாங்கி ட்வீட் செய்திருப்பதாவது, நன்றி காம்யா. ஒரு கேம் ஷோவுக்காக இந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்வதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. சினேகா, நீங்கள் எப்பொழுது வெளியே வந்தாலும் நான் உங்களை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முக்கிய குறிப்பு- நான் தான் இரண்டாவது கணவர் என்றார்.

திருமணம்

சினேகாவுக்கு 19 வயது இருந்தபோது அவிஷ்கரை திருமணம் செய்தார். அவிஷ்கர் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி விவாகரத்து பெற்றார். அதன் பிறகு இன்டீரியர் டிசைனரான அனுராக் சொலாங்கியை 2015ம் ஆண்டு மணந்தார். 8 மாதங்களில் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் தனித்தனியாக வாழ்ந்தாலும் முறைப்படி விவாகரத்து பெறவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்