ஆப்நகரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு இணைய வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

TOI Contributor 11 Jul 2017, 4:59 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு இணைய வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
Samayam Tamil kancha karuppu will enter into bigg boss tamil again
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு?


நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவை அனைவரும் ரசித்து பார்த்து வந்த நிலையிலும் அவருக்கு குறைந்த ஓட்டு கிடைத்தது என்பதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் அதிகளவில் விரும்பி வந்தனர். இந்த நிலையில் தான் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் வெளியே செல்லும்போது போட்டியாளர்களுடன் செல்பி எடுத்து நடனம் ஆடினர்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், விஜய் டிவி சார்பில் தனியாக ஒரு வீட்டில் அவரை தங்க வைத்து இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. வீட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதியில்லை. இதை கஞ்சா கருப்புவே செய்தியாளர் ஒருவரிடம் உறுதி செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் அதிகமானவர்களை வெளியேற்றினால் நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதாலும், போட்டியாளர்கள் கஞ்சா கருப்புவை விரும்புகின்றனர் என்பதாலும் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலுக்கு ஏற்றார் போல், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனுடன் கடந்த வாரம் பேசிக் கொண்டு இருந்த கஞ்சா கருப்பு என்னவானார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Kancha karuppu will enter into Bigg Boss Tamil again

அடுத்த செய்தி

டிரெண்டிங்