ஆப்நகரம்

தாமதமாகும் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 3:43 pm
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் திகில் கலந்த நகைச்சுவை படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
Samayam Tamil kanchana3


மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ‘காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

4 வருடங்களுக்கு பிறகு ‘முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ‘காஞ்சனா 2‘ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்