ஆப்நகரம்

குயின் பட இயக்குநர் மீது கங்கணா ரனாவத் பாலியல் புகார்

குயின் திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தின் நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.

Samayam Tamil 7 Oct 2018, 5:07 am
குயின் திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தின் நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
Samayam Tamil 725864-kangana


2014ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் குயின். விகாஸ் பகால் இயக்கிய இப்படத்தில் கங்கணா ரனாவத் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கங்கனாவும் பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் கங்கணா. ஏற்கெனவே பெண் ஒருவர் இயக்குநர் விகாஸ் பகால் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியதைப் பற்றி பேசிய அவர், அந்தப் பெண் கூறுவதை முழுமையாக நம்புங்கள் என்று தெரிவித்தார்.
மேலும், விகாஸ் பகாலைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்றும் அதிலிருந்து வெளியேறுவதற்கு நான் என் பலத்தை எல்லாம் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்றொரு பாலிவுட் நடிகை தனுஸ்ரீ அண்மையில் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்