ஆப்நகரம்

சண்டைக்காட்சியில் மலையாள நடிகர்களை நிஜமாகவே தாக்கிய கர்நாடக நடிகர்கள்!

பெங்களூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் மலையாள நடிகர்களை, கர்நாடக துணை நடிகர்கள் நிஜமாகவே தாக்கியுள்ளனர்.

Samayam Tamil 10 Feb 2018, 4:10 pm
பெங்களூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் மலையாள நடிகர்களை, கர்நாடக துணை நடிகர்கள் நிஜமாகவே தாக்கியுள்ளனர்.
Samayam Tamil kannada actors who really hit malayalam actors in the fight scene
சண்டைக்காட்சியில் மலையாள நடிகர்களை நிஜமாகவே தாக்கிய கர்நாடக நடிகர்கள்!


மலையாள நடிகர் ஆசிப் அலியும், நடிகை அபர்ணா பாலமுரளியும் இணைந்து ‘பி.டெக்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த ஜோடி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை மிருதுள் நாயர் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் கும்பல் நிறைந்த சாலையில் படத்தின் மற்ற நடிகர்களான சைஜூ குரூப், நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். அப்போது படத்தில் நடிக்க கர்நாடகாவை சேர்ந்த சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் கலந்து கொண்டனர். காட்சிப்படி நடிகர்கள் இருவரையும் துரத்துவது போலவும் அடிப்பது போலவும் துணை நடிகர்களை நடிக்க சொன்னாராம் இயக்குனர்.

ஆனால் அவர்களோ நிஜமாகவே நடிகர்கள் இருவரையும் துரத்தி, தாக்க ஆரம்பித்து விட்டார்களாம். இயக்குனர் கட் சொன்ன பின்னும் கூட நிறுத்தாமல் கட்டுப்பாட்டை மீறிய அவர்கள், படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்