ஆப்நகரம்

தமிழில் பிஸியாக இருக்கும் கன்னட நடிகை!

கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், தமிழ் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

TOI Contributor 11 Jan 2017, 5:25 pm
கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், தமிழ் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
Samayam Tamil kannada actress is busy in kollywood
தமிழில் பிஸியாக இருக்கும் கன்னட நடிகை!


ஸ்ரத்தா ஸ்ரீநாத் சொந்த ஊர் பெங்களூர். ‘கோகினூர்’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். பின்னர் கன்னடபடங்களில் நடித்து பிரபலமானார். அதையடுத்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் படத்துக்காக காத்திருந்தபோது மணிரத்னம் படத்தில் ‘காற்று வெளியடை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போதே சில தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இதனால் தமிழில் பிஸியாக தொடங்கிவிட்டார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடித்துள்ள ‘இவன் தந்திரன்‘ படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நிவின் பாலி,- நட்டி நடராஜன் இணைந்து நடித்துள்ள ‘இவர்கள்’ மற்றும் மாதவன் -விஜயசேதுபதி நடித்து வரும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களிலும் ஸ்ரத்தா நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். சில இயக்குனர்களை சந்தித்து நாயகி கேரக்டர் மட்டுமின்றி வெயிட்டான நல்ல கேரக்டர்கள் கொடுத்தாலும் நடிப்பேன் என்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்