ஆப்நகரம்

ஓட்டலுக்கு பணம் கட்டாமல் எஸ்கேப் ஆன காந்தி பெயர் கொண்ட நடிகை!

‘கொக்கி’ பட மூலம் தமிழில் அறிமுகமான பிரபல நடிகை பூஜா காந்தி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பில் கட்ட முடியாமல் யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆனார்.

Samayam Tamil 19 Mar 2019, 5:59 pm
‘கொக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை பூஜா காந்தி. இந்தப் படத்தை அடுத்து இவர் தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ‘வைத்தீஸ்வரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழையடுத்து இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil pooja gandhi


இந்நிலையில் பூஜா பெங்களூருவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் பில் 4.5 லட்சத்தை கட்டாமல் அங்கிருந்து எஸ்கேப்பானார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாக அளித்த புகாரின்பேரில் போலீஸார் பூஜா காந்தியிடம் விசாரித்தனர்.

இதையடுத்து பூஜா ஹோட்டல் நிர்வாகத்திற்கு பாதி பணத்தை செலுத்தியுள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் மீதி பணத்தை வாய்ப்பு வந்தவுடன் தருகிறேன் என கூறியுள்ளார் அவர். இச்சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்