ஆப்நகரம்

பாகுபலி-2 இசை வெளியீட்டு விழாவில் கரண் ஜோஹர்

பாகுபலி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறயிருக்கிறது.

TNN 24 Mar 2017, 6:27 pm
பாகுபலி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறயிருக்கிறது.
Samayam Tamil karan johar will attend baahubali2 audio launch function
பாகுபலி-2 இசை வெளியீட்டு விழாவில் கரண் ஜோஹர்


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் பாகுபலி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கயிருக்கிறது. இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை இயக்குனர் செய்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனரின் நெருங்கிய நண்பரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இந்த பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளயிருக்கிறார். பாகுபலி படத்தின் ஹிந்தி விநியோக உரிமையை வாங்கி ஹிந்தியில் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தவர் கரண் ஜோஹர்.

பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஹைதராபாத்தில் நடக்கயிருக்கும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் டோலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பாடல்களும் வெளிவந்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் உரிமத்தை லஹாரி ஆடியோ நிறுவனம் ரூ 4.5 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Karan Johar will attend baahubali2 audio launch function

அடுத்த செய்தி

டிரெண்டிங்