ஆப்நகரம்

கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரியின் கதை தெலுங்கு சினிமாவில் திரைப்படமாகிறது.

Samayam Tamil 2 Jun 2020, 12:20 pm
பயோபிக் படங்கள் எடுப்பது தான் கடந்த சில வருடங்களாக இந்திய சினிமாவில் ட்ரெண்ட். கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பலரது வாழ்க்கை பற்றிய படங்கள் வந்திருக்கிறது. தற்போது தயாரிப்பிலும் பல படங்கள் இருக்கின்றன, அது பெரிய பட்டியலே வரும்.
Samayam Tamil Karnam Malleswari Biopic on cards


தமிழில் 'தலைவி' என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, Shakuntala Devi -The Human Computer என்ற பெயரில் பிரபல கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு, அக்‌ஷய் குமார் நடிப்பில் மன்னர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு என பல படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கர்ணம் மல்லேஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். அவர் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை. 2000 வருடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெண்கல பதக்கம் வென்றார் அவர். அது மட்டுமின்றி உலக சாம்பியன்ஷிப் உட்பட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார் அவர்.

நேற்று கர்ணம் மல்லேஸ்வரியின் 45வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக அவரது பயோபிக் படத்தை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தெலுங்கு தயாரிப்பாளர் கோனா வெங்கட்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது..

"அவரது பிறந்தநாளான இன்று, நாங்கள் பெருமையுடன் அடுத்த படத்தை அறிவிக்கிறோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண், கர்ணம் மல்லேஸ்வரியில் வாழக்கை வரலாற்று படம். பல மொழிகளில் இந்தியா முழுவதும் சென்று சேரும் வகையில் உருவாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

'Journey of a girl, who lifted the nation' என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர்.


ராஜூகாடு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சனா ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். கோனா வெங்கட் மற்றும் எம் வி வி சத்யநாராயணா ஆகியோர் இணைந்து இதனை தயாரிக்க உள்ளனர்.

இது பற்றி பேசியுள்ள கோனா வெங்கட், "இந்த கதை தற்போதைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருக்கும். ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் அளவுக்கு சாதித்த அவரது வாழ்க்கை உண்மையில் மிகப்பெரியது"

"இது எளிதாக கிடைத்த ஒன்று அல்ல. இந்த அளவுக்கு உயர அவர் பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளளார். அவரிடம் பேசும்போது வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினார். அதை படமாக்கவும் அனுமதி கொடுத்தார்" என கோனா வெங்கட் கூறியுள்ளார்.

இந்த படத்தினை தயாரிப்பது மட்டுமின்றி அவர் படத்தின் திரைக்கதையை எழுதுவதிலும் பணியாற்றி உள்ளார். அதற்கு அவர் பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவதில் அவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவது யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை தான் இதில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்