ஆப்நகரம்

கன்னடர் தமிழக முதல்வராக வேண்டும்... ரஜினி குறித்து கன்னட அரசியல்வாதிகள் ஆர்வம்

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

TNN 23 May 2017, 11:35 am
பெங்களூரு : ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
Samayam Tamil karnataka people and media wants rajini as cm of tamil
கன்னடர் தமிழக முதல்வராக வேண்டும்... ரஜினி குறித்து கன்னட அரசியல்வாதிகள் ஆர்வம்


எப்போதும் இல்லாத அளவிற்கு, ரஜினி அரசியலுக்கு வர ஆதரவும், எதிர்ப்பு அதிகமாக தமிழகத்தில் காணப்படுகின்றது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக இருப்பது மட்டுமில்லாமல், தமிழக முதல்வராக வரும்நிலை ஏற்பட்டால் எங்களுக்கெல்லாம் பெருமை என கர்நாடக அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை தொடர்ந்து ரஜினிக்கு மவுசு அதிகரித்துள்ளதால், கன்னட ஊடகங்களும் ரஜினி, ரஜினியின் பள்ளிபடிப்பு, அவரது நண்பர்கள், அவர் பிறந்த இடம் குறித்து செய்தியை தான் திருப்பி, திருப்பி வெளியிட்டு வருகின்றனர். ரஜினி தமிழக முதல்வரானால் தமிழக -கர்நாடக பிரச்னை தீர்க்கப்படலாம் என கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்