ஆப்நகரம்

நான் தான் வந்தியத்தேவன்: வித்தியாசமாக உறுதி செய்த கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் தான் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஒரு ட்வீட் மூலம் உறுதி செய்திருக்கிறார் கார்த்தி.

Samayam Tamil 26 Aug 2021, 11:26 am
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் நான் தான் என்று கார்த்தி உறுதி செய்துவிட்டார்.
Samayam Tamil karthi confirms that he is vandhiyathevan in ponniyin selvan
நான் தான் வந்தியத்தேவன்: வித்தியாசமாக உறுதி செய்த கார்த்தி


பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பொன்னியின் செல்வன். அந்த படத்தின் மத்திய பிரதேச ஷூட்டுக்கு கிளம்பிச் சென்ற கார்த்தி, பிரகாஷ்ராஜின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தன் கதாபாத்திரம் என்னவென்பதை உறுதி செய்திருக்கிறார் கார்த்தி.

ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் படத்தில் தான் வரும் காட்சிகளை நடித்து முடித்துவிட்டார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஒன்று அல்ல இரண்டு படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து ட்வீட் செய்தார் ஜெயம் ரவி.

Twitter-Jayam Ravi

கார்த்தி

ஜெயம் ரவியின் ட்வீட்டை பார்த்த கார்த்தி கூறியிருப்பதாவது, இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.- வந்தியத்தேவன் #PS #PonniyinSelvan என்று தெரிவித்துள்ளார்.

Twitter-Actor Karthi

வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவருக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் வந்தியத்தேவன். இந்நிலையில் அந்த வந்தியத்தேவனே நான் தான் என்று கார்த்தி உறுதி செய்திருக்கிறார். துறுதுறுவென இருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்தி பொருத்தமானவர் தான். இதற்கிடையே ஐஸ்வர்யா ராயின் லுக் கசிந்து வைரலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்