ஆப்நகரம்

Kaithi கார்த்தி பட்ட கஷ்டம் எல்லாம் இப்படி வீணாப் போச்சே!

கார்த்தியின் கைதி படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை தமிழ் ராக்கரஸ் கசியவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 4:26 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியுள்ள கைதி படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பிகில் படத்துடன் சேர்ந்து ரிலீஸானாலும் கைதிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil kaithi


தியேட்டர்களில் கைதி படத்தை பார்த்தவர்கள் நல்லவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அந்த படத்தை அதுவும் ஹெச்.டி. பிரிண்ட்டில் கசியவிட்டுள்ளது. கைதி படம் ரிலீஸான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டது.

kaithi review: திகட்டாத ஆக்ஷன் விருந்து- கைதி விமர்சனம்

கைதி படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் செய்த காரியத்தால் அதன் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

கைதி மட்டும் அல்ல இன்று வெளியான பிகில் படமும் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது. எங்க அண்ணனுக்கு நாம தான் பண்ணுவோம் என்று கூறி பிகிலை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

பெரிய படம், சின்ன படம் என்று எது ரிலீஸானாலும் தமிழ் ராக்கர்ஸ் அதை கசியவிடுகிறது. படத்தை வெளியிடும் முன்பு அதை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். இருப்பினும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவதாக இல்லை.

தரமான சம்பவம், வெறித்தனம், படம்னா இது படம்: கைதி ட்விட்டர் விமர்சனம்

மக்களும் படத்தை தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்த்துவிடுகிறார்கள். கேட்டால் தியேட்டரில் கட்டணம் அதிகம், பார்க்கிங் செலவு, ஸ்நாக்ஸ் செலவு என்று ஏகப்பட்ட செலவு என விளக்கம் அளிக்கிறார்கள்.

புதுப்படம் ரிலீஸானாலே மக்கள் கூகுளில் அந்த படத்தின் பெயரை போட்டு தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டதா என்று தேடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்