ஆப்நகரம்

சொன்னதை செய்து முடித்த விநியோகஸ்தர் கார்த்திக்: சாதனா – கார்த்திக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

விநியோகஸ்தர் கார்த்திக் மற்றும் சாதனா டைட்டஸ்-ன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது.

TNN 11 Feb 2017, 12:18 pm
பிச்சைக்காரன் புகழ் சாதனை டைட்டஸூம், அப்படத்தின் விநியோகஸ்தருமான கார்த்திக்கும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனை அதிகாரப்பூர்வமாகவும் பதிவும் செய்து கொண்டனர். ஆனால், இவர்களது காதலுக்கும், திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
Samayam Tamil karthik satna titus wedding reception
சொன்னதை செய்து முடித்த விநியோகஸ்தர் கார்த்திக்: சாதனா – கார்த்திக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி


இந்நிலையில், கார்த்திக் நிச்சயமாக நான் பெற்றோரது திருமணத்தை வாங்கி, அவர்களது முன்னிலையில் எங்களது திருமணத்தை நடத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதேபோல் பெற்றோர்களது சம்மதத்துடன் கடந்த 6ம் தேதி சாதனா டைட்டஸ் மற்றும் கார்த்திக்கின் திருமணம் சேலத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.



இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களான பார்த்திபன், எஸ்.ஜே.சூரியா, ஜிவி பிரகாஷ், காமெடி நடிகர் பாண்டி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Satna Titus Wedding Reception

அடுத்த செய்தி

டிரெண்டிங்