ஆப்நகரம்

அஜித்துக்கு வில்லனாகும் 'ஹீரோ'?

தலைப்பை பார்த்ததும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹீரோ என்று நினைத்துவிட வேண்டாம்.

Samayam Tamil 20 Dec 2019, 4:24 pm
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயா கும்மகொண்டா ஓவியாவின் 90 எம்.எல். படம் மூலம் கோலிவுட் வந்தார்.
Samayam Tamil ajith


இந்நிலையில் அவர் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கார்த்திகேயா ஏற்கனவே நானியின் கேங் லீடர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவருக்கு மகளாக அனிகா நடிக்கிறார் என்பது தான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அமெரிக்கா சென்ற இடத்தில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்தார். இதையடுத்து அவர் தான் ஹீரோயின் என்றே பேசப்பட்டது.

அங்கிட்டு தல அடிச்சு தொம்சம் பண்ணுது, இங்கிட்டு ரஜினி பாட்டு பாடுறார்: ஹய்யோ, ஹய்யோ

தற்போதோ இலியானா அல்லது யாமி கவுதம் ஹீரோயினாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவலை போனி கபூர் இதுவரை உறுதி செய்யவில்லை.

வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. அதே தீபாவளிக்கு ரஜினியின் தலைவர் 168 படமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை வாட்டி பட்டாலும் இந்த 'தல' திருந்தவே திருந்தாதே

அடுத்த செய்தி

டிரெண்டிங்