ஆப்நகரம்

கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘காற்று வெளியிடை’ படம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

TOI Contributor 1 Feb 2017, 4:20 pm
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘காற்று வெளியிடை’ படம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
Samayam Tamil karthis katru veliyidai will be released on april 7th
கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்!


‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் மணிரத்னம் & ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த கூட்டணி 25வது ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. நடிகர் கார்த்தி, மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது இவரது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை அதிதி ராவ் நடிக்கிறார். மேலும் படத்தில் கே.பி.ஏ.சி.லலிதா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

தமிழகம் முழுவதும் ‘காற்று வெளியிடை’ படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்