ஆப்நகரம்

தமிழகத்தில் ரூ.12.5 கோடி வசூல் மழையில் தீரன் அதிகாரம் ஒன்று!

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று தமிழகத்தில் ரூ.12.5 கோடி வசூல் படைத்துள்ளது.

TNN 21 Nov 2017, 5:36 pm
கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று தமிழகத்தில் ரூ.12.5 கோடி வசூல் படைத்துள்ளது.
Samayam Tamil karthis theeran adhigaaram ondru collect rs 12 5 crore in tamilnadu
தமிழகத்தில் ரூ.12.5 கோடி வசூல் மழையில் தீரன் அதிகாரம் ஒன்று!


சதுரங்க வேட்டை புகழ் எச்.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சிறுத்தைப் படத்தைத் தொடர்ந்து போலீஸ் வேடத்தில் கார்த்தி நடித்துள்ள இப்படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நம்மில் ஒருவர் தான் போலீஸ் என்பதையும், அவர்கள் எந்தமாதிரியான சூழலில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது.

மாயா, ஜோக்கர், காஷ்மோரா, மாநகரம் ஆகிய வரிசையில் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தொடர் பல தோல்விகளுக்கு பெற்று வந்த கார்த்திக்கிற்கு இப்படம் வெற்றி கொடுத்துள்ளது. கடந்த 16ம் தேதி வெளியான இப்படம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ.12.5 கோடி வசூல் படைத்துள்ளதாம். சென்னையில் மட்டும் ரூ.2 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.28 கோடி வரை வசூல் அள்ளியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு கார்த்திக்கிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தெலுங்கில் ரூ.7.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்