ஆப்நகரம்

'விருமன்' படத்தின் மரண மாஸ் அப்டேட்: கொண்டாட்டத்தில் கார்த்தி ரசிகர்கள்.!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'விருமன்' படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Samayam Tamil 18 May 2022, 5:37 pm
முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'கொம்பன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil Karthi
Karthi


சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

'விருமன்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மதுரை, தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் வெளியாகும் கார்த்தியின் முதல் படம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்