ஆப்நகரம்

‘கரு’ படத்தின் இசை வெளியீடு!

சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ளது.

Samayam Tamil 23 Feb 2018, 4:25 pm
சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ளது.
Samayam Tamil karu movie audio launch tomorrow
‘கரு’ படத்தின் இசை வெளியீடு!


முதன் முறையாக சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகியுள்ள படம் ‘கரு’ . இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி. அபார்ஷனை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், சாய் பல்லவியின் கணவராக நடிகர் நாக சௌரியா நடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு, நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்