ஆப்நகரம்

தன் படம் மூலம் கதாசிரியர்களின் மகன்களை இயக்குனராக்கி அழகு பார்க்கும் நடிகர் மம்முட்டி!

நடிகர் மம்முட்டி, சினிமா பட கதாசிரியர்களின் மகன்களை தன் படம் மூலம் அவர்களை இயக்குனராக்கி அழகு பார்த்து வருகிறார்.

Samayam Tamil 31 Mar 2018, 5:47 pm
நடிகர் மம்முட்டி, சினிமா பட கதாசிரியர்களின் மகன்களை தன் படம் மூலம் அவர்களை இயக்குனராக்கி அழகு பார்த்து வருகிறார்.
Samayam Tamil kasaba


நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். நடிகர் மம்முட்டியிடம் ஒரு அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர் படத்துக்கு கதாசிரியர்களாக வருபவர்கள் பலரும் மம்முட்டியின் படத்தை இயக்குவதன் மூலம் டைரக்டராகவும் புரமோஷன் அடைகிறார்கள். இது பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

அதுமட்டுமல்ல, கதையாசிரியர்கள், இயக்குனர்களின் வாரிசுகளும் மம்முட்டியை வைத்து தங்களது முதல் படத்தை இயக்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார் மம்முட்டி. கடந்த வருடத்தில் கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கரை தன்னுடைய ‘கசபா’ படத்தின் மூலம் இயக்குனராக்கினார் மம்முட்டி.

அதேபோல் தற்போது மலையாள சினிமா பிரபல கதாசிரியர்களில் ஒருவரான கலூர் டென்னிஸ் என்பவரது மகன் டீனு டென்னிஸ் என்பவருக்கும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளார் மம்முட்டி. இந்தப்படம் ஒரு கேம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இந்த கலூர் டென்னிஸ் மம்முட்டிக்கு மட்டுமே 24 படங்களுக்கு கதை எழுதி சாதனை படைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்