ஆப்நகரம்

மீண்டும் ஒரு விசாரணையா? காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரெய்லர் இதோ!

காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Mar 2020, 8:43 pm
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை சரியான கோணத்தில் காட்டிய படங்கள் கொஞ்சம்தான். காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை எப்படி கட்டுப்படுத்துகிறது, அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை சொல்லும் படங்களில் ஒன்றாக காவல்துறை உங்கள் நண்பன் படம் உருவாகியுள்ளது.
Samayam Tamil kunt


வழக்கு ஒன்றுக்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களில் ஒருவரான கதையின் நாயகன், எவ்வாறு பாதிக்கப்படுகிறான். காவல்துறையின் அராஜகம் என்ன, அதிலிருந்து எப்படி மீள்கிறான், போராடுகிறான் என்பதை மையப்படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது. இது உண்மை கதை என படத்தின் ட்ரெய்லரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரெய்லரை இங்கு காணுங்கள்.


பிஆர் டாக்கிஸ் கார்ப்பரேசன் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து வழங்கும் படம் காவல்துறை உங்கள் நண்பன். ஜி தனஞ்செயன் இந்த படத்தை வெளியிடுகிறார். சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் விசாரணை படத்தின் ஓரளவுக்கான காட்சிகளுடன் ஒத்துப் போகிறதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர் ஆதித்யா மற்றும் சூர்யா. எடிட்டிங் - வடிவேல் மற்றும் விமல்ராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்