ஆப்நகரம்

இரண்டாவது படத்திலே ஜாக்பாட்: நயன்தாரா படத்தில் கமிட்டாகும் பிக்பாஸ் கவின்!

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ்சார்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 4 Oct 2021, 6:20 pm
பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவான 'லிஃப்ட்’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
Samayam Tamil Kavin
Kavin


கவின் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் ஏற்கனவே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் 'லிஃப்ட்' படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா நடித்துள்ளார்.

இந்நிலையில் கவினின் அடுத்தப்படம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் வாழ்க்கைல அந்த சம்பவம் நடந்து 2 வருஷம் ஆச்சு: கொண்டாடும் ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது இரண்டாவது படத்திலே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 'லிஃப்ட்'படத்திலே கவினின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்