ஆப்நகரம்

சாந்தனுவின் “ராவண கோட்டத்தில்” சீதையாகும் ஆனந்தி!

நடிகை ‘கயல்’ ஆனந்தி, இளம் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 3:27 pm

நடிகை ‘கயல்’ ஆனந்தி, இளம் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil kayal-anandhi


‘கயல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அதையடுத்து இளம் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், ஜி.வி.பிரகாஷ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் பெரிய ஹிட் ஆனது. இந்தப் படம் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்நிலையில் நடிகை ஆனந்தி, தற்போது நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அழகை பாதுகாப்பதில் அறிவியலுக்கு என்ன வேலை: பழம்பெரும் நடிகை சச்சுவின் கலாட்டா!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சாந்தனு ஹீரோவாக நடிக்கும் படம் ‘இராவணகோட்டம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்