ஆப்நகரம்

கழுகு இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடக்கம்

கழுகு படத்தின் இரண்டாம் பாகம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

Samayam Tamil 29 Jun 2018, 4:32 pm
கழுகு படத்தின் இரண்டாம் பாகம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
Samayam Tamil kazhugu_movie_stills_13


கிருஷ்ணா நடிப்பில் 2012ல் வெளியான படம் ‘கழுகு’. இந்தப் படத்தை சத்யா சிவா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கிருஷ்ணாவுடன், பிந்து மாதவி,

தம்பி ராமையா, கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்திலும் கிருஷ்ணா ஹீரோவாகவும், பிந்து மாதவி

ஹீரோயினியாக மீண்டும் நடிக்கின்றனர். நடிகர் காளி வெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாஇசையமைக்கிறார். படத்தை சத்யா சிவா இயக்குகிறார். படத்தை ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் மூணாரில் ஆரம்பமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்